அப்போதைய கோவை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் மேதகு.பிரான்சிஸ் சவரிமுத்து அவர்களால் 1964ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் தேதி கோவை மாநகரத்தில் ஆண்களுக்கான முதல் பதின்ம பள்ளியாக கார்மல் கார்டன் மெட்ரிக்குலேசனானது வெற்றிகரமாக துவங்கப்பட்டது.
எமது பள்ளி 1966ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 1969-70 ம் ஆண்டு பழைய முறைகளின்படி 11ம் வகுப்பு தொடங்கப்பட்டு 100% தேர்ச்சியை பெற்று தந்தது. 1978 ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டு, 1980 ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் குழுவே 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. மழலைகளை செதுக்கவும், உருவாக்கவும் படைப்பாற்றல் திறனோடு மழலைகளை உருவாக்க பாதுகாப்பான | சூழலில் 1981-ம் ஆண்டு கார்மல் மழலையர் பள்ளி துவங்கப்பட்டது.
இதன் உச்சகட்டமாக 1989-90 ம்ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுகள் பல உருண்டோடின, ஆண்டவரின் கிருபையால் அருட்தந்தையர்களின் தலைமையில் ஆசிரியர்கள் குழு பல்வேறு வெற்றிகளை தொடர்சிசியாக பெற்றுக் கொடுத்தது. வரலாற்றில் அடுத்த மைல்கல்லாக பொன் விழாவானது 2014-2015 கொண்டாடப்பட்டது. கல்வி சமூகமாற்றத்திற்கான ஒரு கருவி என்பதையும் வகுப்பறை அதற்கான இடம் என்பதையும் நாங்கள் என்றென்றும்நினைவில் கொண்டு செயல்படுத்தி வருகிறோம்.
பல விழுமியங்கள் மற்றும் சுய ஒழுக்கத்துடன் வேரூன்றிய கல்வியை வழங்குவதும், ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட, ஆன்மீகம் உடல் மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், வெற்றியிலிருந்து ஊக்கத்தைப் பெறுவதும், பின்னடைவுகளிலிருந்து முதிர்ச்சியைப் பெறுவதும், நிர்வாகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே
நல்லுறவை ஏற்படுத்துவதும் எங்கள் நோக்கம் ஆகும்.
இந்த நோக்கத்துடன் நாங்கள் 2024 ஆம் ஆண்டு வைர விழா ஆண்டுக்குள் நுழைந்தோம். இது எமது பள்ளி வரலாற்றில் முக்கிய கட்டமாக இருப்பதால், "சுயத்திற்கு திரும்பு” என்ற குறிக்கோளுடன் நிர்வாகம், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இந்த இலக்கை நிறைவேற்றுவோம். இந்த கனவை நினைவாக்க எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவராக.